தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..?

Photo of author

By Jayachandiran

தமிழில் பெயர் இல்லை என்றால் அபராதம்! மீறினால் தார் பூசி அழிப்போம்! அமைச்சரின் அதிரடி பேச்சு..?

தமிழகத்தில் உள்ள அதிகபட்சமான நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் தமிழில் வைக்காமல் ஆங்கிலத்திலேயே உள்ளது. மற்றவருக்கு எளிதில் பார்த்தவுடன் புரிய வேண்டுமென்று ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் இருக்கும் கடைகள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமே இருக்கின்ற நிலையில் பலர் தமிழல்லாத ஆங்கிலம் இல்லது தமிழும், ஆங்கிலமும் கலந்த மொழியில் வைக்கின்றனர். தமிழ்மொழி மற்றும் ஆங்கிலமொழியில் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால் 5:3 என்ற விகிதத்தில் வைக்க வேண்டும். பிற மொழிகளை சேர்த்து வைப்பதாக இருந்தால் 5:3:2 என்ற விகிதத்தில் வைக்க வேண்டும்.

நீண்ட நாட்களாக இதை யாரும் கேள்விகேட்காத காரணத்தால் அவரவர் விருப்பத்திற்கு ஆங்கிலத்திலும் இன்னும் பிற மொழிகளிலும் கலந்து வைத்துள்ளனர். அரசு கொண்டுவந்த சட்டத்தை இதுவரை யாரும் சரிவர பயன்படுத்தியதில்லை. இதையடுத்து, சென்னையில் நடந்த தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் தமிழ்மொழி வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில்;

தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அபராதம் விதிக்கும் பொறுப்பை தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். மேலும், தமிழில் பெயர் வைக்காத நிலை ஏற்பட்டால், நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளை தார் பூசி அழிக்கவும் தமிழ் வளர்ச்சித்துறை தயங்காது என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.