மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..

0
190
Again a surprise raid in the office of a film producer!.. Cinema world in excitement!..
Again a surprise raid in the office of a film producer!.. Cinema world in excitement!..

மீண்டும்  ஒரு சினிமா தயாரிப்பாளர்  அலுவலகத்தில் திடீர் சோதனை!.. பரபரப்பில் சினிமா உலகினர்!..

எஸ்.தானு ஒரு இந்தியா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வெளியிட்டாலாராவார். இவர் திரைத்துறையில் கலைப்புலி என அறியப்படுபவர். மேலும் இவர் கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விரியேஷன்ஸ் திரைப்படங்களை தயாரித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும்  சில படங்களில் நடிகராகவும் நடித்து வந்துள்ளார்.

மேலும் இவர் சில தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் அலுவலகத்தில் வருமான  வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தியாகராயர் நகரில் உள்ள இவரது அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானுவிற்கு சொந்தமான உறவினர் வீடு மற்றும் அவருக்கு தெரிந்த நண்பர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மாலை வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஏற்கனவே சினிமா பைனான்ஸ் இன் அன்புச்செழியன் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் அதிகாலை முதலிலே வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைப்புலி எஸ் தானுவின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Previous articleநெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!
Next article ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் உண்டியலை திருட சென்ற திருடன் உண்டியலை உடைக்க முடியாததால் துர்கை அம்மன் சிலையை திருடி சென்ற அவலம்!