சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி பல மாணவிகள் கூறி வருகின்றனர். 96 படத்தில் நடித்த ஜானு கௌரி கிஷன் கூட தனது பள்ளியில் ஏற்பட்ட சம்பவத்தைப் பற்றியும் நேற்று பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் பள்ளியில் நடந்த கொடுமைகளை சின்மயிக்கு பகிர்ந்துள்ளார். அதை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அந்த மாணவி, PSBB பள்ளியில் நடந்தவற்றை வெளியில் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நான் அனுபவித்த பாலியல் கொடுமைகளை கூறுகிறேன். உங்களது இரண்டு நிமிடங்களை ஒதுக்கி எனக்காக இதை படிக்கவும். சாந்தோம் உயர் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரான பால் அமலனால் நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன்.
அவர் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பார். மாணவர்களை மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவரது கேரக்டர்களை மிகவும் மோசமாக சித்தரித்து பேசுவார். சொல்லவும் வாய் கூசும் வார்த்தைகளை கொண்டு அழைப்பார்.
அவர் கேட்ட வார்த்தைகளை பேசும் பொழுது நான் அவரை எதிர்த்தேன். அதனால் என்னைக் கண்டால் அவருக்கு பிடிக்காது. தேவையில்லாமல் என்னை பிரம்பால் அடிப்பார். அம்மாவை பள்ளிக்கு கூட்டி வரச் சொல்லி அவர்கள் முன் அசிங்கமாக பேசி அவமானப்படுத்தினார். என் அம்மா கண்களில் கண்ணீரோடு வெளியேறியது இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. யாரும் உதவவில்லை. அவர் பிராக்டிக்கல் மார்க்கை குறைத்து விடுவேன் என்று கூறி பயமுறுத்தினார். என அந்தப் பெண் சின்மயிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
In the meanwhile – this is am account from another kid
Can some teachers stop abusing children in class?
So much abuse of power. pic.twitter.com/BPm4zikeUW
— Chinmayi Sripaada (@Chinmayi) May 25, 2021
தொடர்ந்து இந்த மாதிரியான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் பூதாகரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.