திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

0
46
Trying to distract? Celebrities condemned!
Trying to distract? Celebrities condemned!

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

சென்னை கே.கே நகரில் உள்ள பிரபலமான பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோரிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அந்த கேடு கேட்ட ஆசிரியரின் அந்த செயலால் மனஉளைச்சலில் ஒரு மாணவி வேறு ஒரு முன்னாள் மாணவி ஒருவரிடம் தனது மன குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது மாடலிங் துறையில் உள்ள அந்த முன்னாள் மாணவி அந்த ஆசிரியரின் தகவல்களை சேகரித்து வலைத்தளத்தில் பதிவிட்டதால் அந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதனை தொடர்ந்து, சென்னை நங்கநல்லூரில் இந்து காலனி 7 வது தெருவில் வசித்து வந்த அந்த ராஜகோபாலன் மற்றும் அவரது மனைவி மற்றும் தயார் ஆகியோரை கைது செய்து சென்றனர்.

அவரை 8 ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போலீஸ் விசாரணையில், அவரை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது.அந்த ஆசிரியரின் ஆன்லைன் குழுவில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவிகள் உள்ளனர் என்றும், 100 மாணவிகளுக்கு மேல் அவரிடம் படித்துள்ளதாகவும் கூறினார்.

வகுப்பு எடுக்கும் போதே அரைகுறை ஆடையுடன் தோன்றிய காட்சிகள் நேற்று விடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து மாணவிகளின் தனி எண்களுக்கு அவர் அனுப்பிய ஆபாச வீடியோக்களை பற்றியும் விசாரணையில் அவரே போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.மேலும் இந்த பிரச்சனையை சாதி பிரச்சனையாக திசை திருப்ப பலர் முயற்சிக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 2 பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’மகாநதி’. இன்னும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை பின்பற்றும் நம் பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினையை சாதிப் பிரச்சினையாகக் திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

அதே போல் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.

இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர்.

சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.