முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

0
85

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அனுமதி இல்லாமல் முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த முழுமையான ஊரடங்கு தினங்களில் பத்திரிக்கை, ஊடகங்கள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அவர்களை தவிர்த்து வேறு யாராவது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு ஊரடங்கு தினங்களில் பழங்கள், காய்கறிகள் போன்றவை பொது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதம் செய்கையில் முதலில் ஒரு வார கால ஊரடங்கை செயல்படுத்தி அதன் பின்னர் நோய்த்தொற்று பரவலை பொருத்து அந்தப் தொற்று பரவலை நீட்டித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நோய்த்தொற்று பரவலை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தற்சமயம் அமலில் இருக்கின்ற ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.