நாம் வசிக்கு பகுதியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது உள்ளூர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை தான் வீட்டு வரி எனப்படுகிறது. மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு தான் வீட்டு வரி விதிக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் தற்போது நினைவுச்சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்த கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலிருந்து பல மக்கள் வந்து இந்த தாஜ்மஹாலின் அழகை ரசித்து கொண்டு செல்கின்றனர். உள்நாட்டில் இருக்கும் பலருக்கும் ஒருமுறையாது ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
இப்பேற்பட்ட நினைவுச்சின்னத்திற்கு தான் ஆக்ரா மாநகராட்சி வீட்டு வரி செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தாஜ்மஹாலுக்கு முறையாக வீட்டு வரி செலுத்தாத காரணத்தினாலும், நடப்பு நிதியாண்டிலும் உரிய தொகையை செலுத்தாத காரணத்தினாலும் ஆக்ரா மாநகராட்சி அபாரதத்துடன் சேர்த்து மொத்தமாக ரூ.1,47,000 தாஜ்மஹாலுக்கு செலுத்துமாறு தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபோன்று தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் வந்திருப்பது இதுவே முதல்முறை என்பதால் நோட்டீசை கண்ட தொல்லியல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
உண்மை நிலவரம் என்னவென்றால் தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது தெரிய வந்துள்ளது. அதாவது மாநகராட்சி இந்த வீட்டு வரி வசூலிக்கும் பொறுப்பை ஒரு கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறது, அவர்கள் சேட்டிலைட் மூலமாக கணக்கீடுத்து தவறுதலாக தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு ஆக்ரா மாநகராட்சி நடந்த தவறு குறித்து தொல்லியல் துறைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறது.