ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

0
199
Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?
Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.அந்த வகையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை மக்கள் அதிக ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் கொண்டாடினார்கள்.

அதனை தொடர்ந்து இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவர்கள் கொண்டாடுவதற்கு அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

பொங்கல் பண்டிகை அன்று தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என்பதும் கலாகாலமாக வழக்கத்தில் இருப்பதுதான்.அதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதற்கென சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் இந்நிலையிலும் பீட்டா அமைப்பு மாடுகள் துன்புறுத்தப்படுகின்றது அதனால் இந்த போட்டி நடைபெற கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட இருப்பதினால் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம்,அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.இன்று அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காளைகளின் உரிமையாளர்கள்,மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள பரிசுப் பொருட்கள் பற்றியும் ஆலோசனை  நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleதினைப் பொருள் ஊக்குவிப்பு!! கூட்டத்தொடரில் எம்பிகளுக்கு மோடி கட்டளை!
Next articleதாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்…அதிர்ச்சியில் தொல்லியல் துறை !