அதிமுக கட்சியில் அதிகாலை வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் யார்?

0
80

அதிமுக கட்சியில் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது அனைவரும் அறிந்ததே. அதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அப்போது 11 பேர் கொண்ட குழு அமைத்து ஒவ்வொரு முடிவையும் முழுமையாக பரிசீலனை செய்த பிறகே இறுதி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இந்த பதினோரு பேர் கொண்ட குழு அதில் முதல் ஆறு பேர் ஒரு தரப்பிலும் மீதமுள்ள ஐந்து பேர் மறு தரப்பிலும் கருத்துக்களை ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக இன்று அதிகாலை வரை அதிமுக கட்சி அமைச்சர்களும், நிர்வாகிகளும் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவுகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை 10 மணி அளவில் அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக அமைச்சர்கள் பேட்டியில் கூறியுள்ளனர். மேலும் அதிமுக கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருவதாகவும் தொடர்ந்து மக்களுக்கு தங்கள் நற்பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முடிவெடுத்துள்ளதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தின் நுழைவுவாயிலில் வாழைமர தோரணங்களும், அவ்வை சண்முகம் சாலை முதல் டிடிகே சாலை வரை வழிநெடுக வாழைமர தோரணங்களும், இருபுறமும் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K