இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

0
112
AIADMK leader spoke obscenely to a young woman!! Police action!!
AIADMK leader spoke obscenely to a young woman!! Police action!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சென்னை மாநகரில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோட்டில் இருக்கக்கூடிய ஜெருசலம் என்னும் நகரில் வசித்து வருபவர் தான் 47 வயதுடைய குமணன் ஆவார்.

இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 53 ஆவது வார்டிற்கு வட்டச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசியலில் இருப்பதை தாண்டி, ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது முதலிய தொழில்களையும் செய்து வருகிறார்.

இவ்வாறு அனைவருக்கும் வட்டிக்கு பணம் கொடுப்பதை ஒரு தொழிலாக செய்யும் அதிமுக வட்டச் செயலாளர் குமணன், தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு பணம் வட்டிக்கு கொடுத்து உதவி உள்ளார்.

இந்த பண உதவி அளித்த பிறகு குமணன் தினமும் அப்பெண்ணிடம் ஆபாசமாக பேச தொடகி உள்ளார். உதவி செய்ததை பயன்படுத்தி அப்பெண்ணிடம் ஆபாசமாக தொலைப்பேசியின் மூலம் பேசி உள்ளார்.

மேலும், அந்த பெண்ணின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் அதிமுக வட்டச் செயலாளர் குமணன் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரித்த காவல் துறையினர், குமணனை கைது செய்து விட்டனர். இதனையடுத்து இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு உதவி செய்த ஒரு பெண்ணிடம் உரிமை எடுத்துக் கொண்டு தவறாக நடந்து கொண்டது அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு  டிராக்டர் வாங்க பணம் கொடுக்கும் வங்கி!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
Next articleபிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!