அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர்   மனைவி போலீசில் தஞ்சம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன், மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.மேலும் இவரிடம் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நாராயணன் தனது காரில் உசிலம்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும், காரை ஸ்ரீதர் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அச்சமயத்தில் அவ்வழியாக அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் தனது காரில் வந்ததாகவும், நாராயணன் தனது காரில் இருந்து இறங்கி சையதுகான் காருக்குமாறி உள்ளார்.நாராயணன் தனது கார் ஓட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் உள்ள ரூபாய் 50 லட்சத்தை தனது வீட்டில் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என கூறி சென்றுள்ளார்.
அவ்வாறு சொல்லிவிட்டு நாராயணன் சையது காணுடன் பெரியகுளம் சென்றுள்ளார். இந்நிலையில் காரை நாராயணன் வீட்டில் நிறுத்திய டிரைவர் ஸ்ரீதர், ஒப்படைக்க கூடிய 50 லட்சம் பணத்துடன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் பதறிப்போன நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீதரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் டிரைவர் ஸ்ரீதர் மீது புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.இந்நிலையில் திடீரென்று ஸ்ரீ தர் மனைவி கெங்கம்மாள் தனது கணவரை சில நாட்களாக காணவில்லை என்றும் அவரது கைபேசி அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும்,அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி
தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரைப் பெற்றுக் கொண்ட பெரியகுளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரு தரப்பினரும் தனித்தனியே புகார் அளித்துள்ளதால் பெரியகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment