”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
152

”என் தோழி விரைவில் நலம் அடைவார்” யாஷிகாவிற்காக பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு!!

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். மேலும், யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.

இதற்கு பின், யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அத்துடன் இவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில், அவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம்-புதுச்சேரி ஈசிஆர் சாலையில் இரவு அதிவேகமாக காரை யாஷிகா இயக்கியுள்ளார். இரவு 11:45 மணி அளவில் சூலேரிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் உள்ள பேரிக்கேடில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதனை தொடர்ந்து கார் பலத்த சேதமடைந்தது. அத்துடன் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரை ஓட்டி வந்த யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்இருக்கையில் அமர்ந்து இருந்த ஆண்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

இதனிடையே தற்போது யாஷிகாவின் உடல்நிலை குறித்து, பிரபல பிக் பாஸ் போட்டியாளர் நடிகை ஐஸ்வர்யா தத்தா ட்விட்டர் பக்கத்தில், ‘என் நண்பர் நன்றாக இருக்கிறார். விரைவில் நலம் அடைவார். அவரது மனவுறுதி வலுவாக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது அதிகமாக கார் இயக்கியது, உயிர்சேதம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், யாஷிகாவின் ஒருவர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Previous articleஇனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
Next articleதமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில்… இது ரொம்ப நல்ல விஷயமா இருக்கே!!