ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

Photo of author

By Divya

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

Divya

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை அமைச்சர் விஜய்குமார் காவித் கலந்து கொண்டார்.இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,தினமும் மீன் சாப்பிடுபவர்களின் தோல் மென்மையானதாகவும், கண்கள்அழகாகவும் மின்னும்.இதனால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் உங்கள் அழகிய கண்களால் எளிதில் ஈர்த்து விட முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பற்றி நான் உங்களிடம் கூறியிருக்கிறேனா? அவர் மங்களூருவில் உள்ள கடற்கரை பகுதியில் பிறந்தவர்.அவர் சிறு வயதிலிருந்து தினமும் மீனை உணவாக எடுத்து வருகிறார்.மீனில் சில வகையான எண்ணெய் வித்துகள் உள்ளன.இதனால் தான் அவரது கண்கள் மீனை போல் அனைவரையும் ஈர்க்கின்றது.நீங்கள் அவரின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்களும் அவரைப் போல் தினமும் மீனை உணவாக எடுத்து வந்தீர்கள் என்றால் உடலும்,கண்களும் அழகாக தோற்றம் அளிக்கும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ அமோல் மிட்காரி “பழங்குடியின மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத அமைச்சர் இது போன்ற அற்பமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்” என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.ஒரு அமைச்சரின் உரை இப்படி தான் இருக்குமா? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது.அதை பற்றி எல்லாம் பேசாமல் மீன் சாப்பிடுங்கள்,ஐஸ்வர்யா ராய் போல் அழகு வந்திடும் என்று சொல்வது பொறுப்பற்ற பேச்சு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.