ஓபிஎஸ் மகனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி!

0
74

கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76, 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவித்து தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனதில் ஓட்டுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும் தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். ஆகவே அவருடைய தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு நடுவில் தேர்தல் தொடர்பாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு ரவீந்திரநாத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது. ஆகவே அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்து அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் தவிந்திரநாத் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மணவானது சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது தற்போதுள்ள நிலையில் இந்த வடக்கில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.