சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!
நாட்டில் எங்கு பார்த்தாலும் சூதாட்டம் ஆடுவது இப்போது அலட்சியமாகிவிட்டது. சாதாரணமாக விளையாடாமல் குறிப்பிட்ட தொகையை வைத்து விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சட்ட விரோதமாக சூதாட்டம் விளையாடியதாக ஒன்பது நபரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மாம்பழம் பட்டுசாலை மேம்பாலத்தின் அடியில் இருப்பது இந்திரா நகர். இப்பகுதியில் சூதாட்டம் விளையடுவதாக தகவல் வந்த நிலையில் நேற்று போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்போது வீரப்பன், முருகன், பத்மநாபன் ஆகிய மூவரும் பணம் வைத்து சட்டத்திற்கு எதிராக சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த காவல் துறையினர் அவர்கள் மூவரையும் உடனடியாக கைது செய்தனர்.
இதனை அடுத்து கோனூர் பகுதியிலும் சூதாட்டம் விளையாடியதாக வேலாயுதம், ரமேஷ், செந்தில், வேலன், கேசவன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய ஆறுப் பேரையும் கைது செய்து காவல் துறைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருகின்றனர். நாட்டில் சூதாட்டம் விளையாடுவது தவறு என்று தெரிந்தும் இதை செய்யும் நபர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.