ஜப்பான் நிறுவன கப்பல் ஒன்று மொரீஷியஸ் கடற்பகுதியில் கசியும் எண்ணெய் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளன. கடந்த மாதத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் 1000 டன் எண்ணெய் கசிந்தது. கடல்வாழ் உயிரினங்களின் உடல் உறுப்புகளில் கறுப்பு நிறத்தில் திரவம் போன்று காணப்பட்டது. கப்பல் மேலும் முறியும் போது மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என மொரீஷியஸ் பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய் கசிவின் காரணமாக தீவின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது என மொரீஷியஸ் வனவிலங்கு அமைப்பின் இயக்குநர் வேதனை தெரிவித்தார்.