வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

0
61

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. முறையாக வரி செலுத்துவோர் கௌரவிப்பதற்காக ”வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாளரை கௌரவித்தல்”  என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக சங்கத்தினரும் பட்டயக் கணக்கர் சங்கத்தை சேர்ந்த வரும் வரி செலுத்திய பிரபலங்களும் பங்குபெற உள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு அறிக்கையில் கூறியதாவது: கடந்த ஆண்டுகளாக  நேரடி வரி  விதிப்பில் பல்வேறு முக்கிய சீர்திருத்தத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கொண்டுவந்துள்ளது.

இந்த சீர்திருத்தத்தின் ஆல் பெரிய நிறுவனங்களின் வரிகள் கடந்த ஆண்டை விட 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புதிய தொழிற்சாலைகளுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.

எனவே பகிர்ந்தளிக்கப்படும் ஈவுத்தொகை மீது வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்காக வருமான வரி செலுத்தும் விண்ணப்பங்கள் மிக எளிதாக வடிவமைக்கப்பட்டது.

மேலும் வரி செலுத்தும் முறையில் பல்வேறு விதமான வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரப்பட்டது. இந்த கொரோனா தற்காலத்திலும் வரி கணக்கு செலுத்துவோருக்கு உதவும் எண்ணத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் நேர்மையாக வழி செலுத்துவோரை பெருமைப்படுத்தி புதிய  திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K