தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!

CineDesk

All these districts in Tamil Nadu are dry land!! Tamil Nadu Govt.

தமிழகத்தில் இந்த மாவட்டங்கள் அனைத்தும் வறண்ட பூமி!! தமிழக அரசு அறிவிப்பு!!

ஓவ்வொரு வருடமும் பெய்யும் பருவமழையை பொறுத்து குறைவான மழை பொழிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2022  ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்கள் சேதமடைந்து உள்ளது.

எனவே, இந்த பகுதிகளை வறட்சி தாக்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் வறட்சி பகுதிகளாக மொத்தம் ஆறு மாவட்டங்களில் உள்ள இருபத்தைந்து வட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் இருபத்தைந்து வட்டங்கள் வறண்ட பகுதிகளாக இடம் பெற்றுள்ளது.

அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் மற்றும் மணல்மேடுகுடி இடம் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார் கோவில் மற்றும் மானாமதுரை இடம் பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, போகலூர், கடலாடி, மண்டபம், நயினார் கோவில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி பகுதியும், விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி மற்றும் திருசுழி பகுதிகளும் இந்த வறட்சி மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.