எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!

0
297
#image_title

எப்பொழுதும் தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த இரண்டு பொருட்கள் போதும்!

தொண்டை கரகரப்பு பிரச்சனையை குணப்படுத்த பயன்படும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக இருமல், சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு தொண்டை கரகரப்பு பிரச்சனை இருக்கும். அதாவது தொண்டையில் சளி கட்டிக் கொண்டு தொண்டை கரகரவென்று இருக்கும். அடிக்கடி இருமல் வரும். இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேவையான இரண்டு பொருட்கள்…

* அதிமதுரப் பொடி
* தேன்

செய்முறை…

இருமல் பிரச்சனை என்றாலே அதிகம் பயன்படுத்தக் கூடிய மருந்துப் பொருள் அதிமதுரப் பட்டை தான். இந்த பட்டையை சாதாரணமாக நாவில் வைத்து அதன். சாற்றை மட்டும் விழுங்கினால் இருமல் சரியாகி விடும். அதே போல அதிமதுரப் பொடியும் இருமல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும்.

நாட்டு மருந்து கடைகளில் அதிமதுரப் பொடி கிடைக்கும். அதை வாங்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த அதிமதுரப் பொடியை 2 கிராம் அளவு தேனில் சேர்த்து நன்கு குலைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை மட்டுமில்லாமல் தொண்டை கரகரப்பு பிரச்சனையும் சரியாகும். மேலும் சரியும் குணமாகும்.

Previous articleஉங்களை தினமும் மூட்டு வலி பாடாய் படுத்துகின்றதா? இந்த வைத்தியம் செய்தால் வலி காணாமல் போய்விடும்!
Next articleநாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!