ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

0
37
#image_title

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம்,
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும்.

வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி விடுகிறது.இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணுதல் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 10 கிராம்

*பட்டை – 100 கிராம்

*திப்பிலி – 10 கிராம்

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

1)ஒரு உரலில் மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு 10 கிராம் சேர்த்து இடித்து கொள்ளவும்.அதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

2)அதே உரலில் அதிக வாசனை நிறைந்த பட்டை 100 கிராம் போட்டு நன்கு இடித்து பவுடர் செய்து கொள்ளவும்.இதையும் அந்த தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3)பின்னர் அதே உரலில் 10 கிராம் திப்பிலி போட்டு இடித்து பொடி செய்து மிளகு,பட்டை இடித்து வைத்துள்ள அதே தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.இதை மூன்றையும் நன்கு மிஸ் செய்து ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

4)தினமும் காலைக்கடன் முடித்து குளித்து வந்த பின் வெறும் வயிற்றில் செய்து வைத்துள்ள பவுடரில் 2 தேக்கரண்டி எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் சளி,இருமல்,தொண்டை வலி உள்ளிட்டவை நீங்கும்.