தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!!

0
70
#image_title

தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட்! அடுத்தகட்ட ஷூட்டிங் எங்கு தெரியுமா!!

நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி68 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றிய அசத்தலான அப்டேட் கிடைத்துள்ளது.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்குகிறார். இதற்கு மத்தியில் சமீபத்தில் தளபதி 68 படக்குழு திரைப்படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது.

அந்த பூஜை வீடியோவில் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள் என அனைவரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி தளபதி68 திரைப்படத்தில் நடிகர்கள் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, அஜ்மல் அமீர், ஜெயராம், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா அவர்கள் தளபதி 68 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் தளபதி68 திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் தற்பொழுது தளபதி68 திரைப்படத்தின் அசத்தலான அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது தளபதி68 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு நவம்பர் 1ம் தேதி தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தாய்லாந்தில் பிரம்மாண்டமான சேஸிங் காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.