8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

0
30
#image_title

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

8 வருடங்களாக தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் நேற்றைய(அக்டோபர் 28) போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஸ்ட்ரீக்கை முடித்துக் கொண்டதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், டி20, ஒருநாள் பெட்டிகள் என்று அனைத்துவித போட்டிகளிலும் விளையாடி வருகின்றார். இவர் கடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடத் தெடங்கினார். அப்பொழுது இருந்து அவர் விளையாடும் ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியில் விக்கெட் எடுப்பார். இந்நிலையில் நேற்று(அக்டோபர்28) நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரில் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற வில்லை.

நேற்று(அக்டோபர்28) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மென்கள் டிரவியாஸ் ஹெட்(109), டேவிட் வார்னர்(81ரன்கள்), மேக்ஸ்வெல்(41) ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இறுதி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜாஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை. இதன் மூலம் 2015ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை இந்தாண்டு வரை விளையாடி வரும் மிட்செல் ஸ்டார்க் உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் குறைந்தது ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் இந்த ஸ்ட்ரீக் நேற்றைய(அக்டோபர் 28) போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காததால் ஸ்ட்ரீக் முடிவுக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.