உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் விமான சேவைகள் உள்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல கடந்த மூன்று மாதமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் போட்டியின் இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியும், சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மனும் மோதினர். ஜெனிபர் பிராடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டீச்மனை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.