கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்திவைப்பு:? காரணம் இதுதான்! இதற்கு பொறுப்பு பல்கலைக்கழகமா அல்லது கல்லூரியா?

0
70

கல்லூரி தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்திவைப்பு:? காரணம் இதுதான்! இதற்கு பொறுப்பு பல்கலைக்கழகமா அல்லது கல்லூரியா?

கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வணங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளானது கடந்த வாரம் வந்த நிலையில்,பாதி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.இதனால் பெற்றோர்களும் மாணவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானர்.இந்நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது,
மாணவர்களிடம் வசூல் செய்த தேர்வு கட்டணத்தை,தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லையென்று பல்கலைக்கழக தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வருகின்றன.

மேலும் இதுகுறித்து கேட்டபோது தனியார் கல்லூரி மாணவர்களின் முடிவுகளை இதனால்தான் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைகழகம் வெளியிடப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தனியார் கல்லூரிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே அவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மாணவர்கள் தங்களது கல்விக் கட்டணத்தை செலுத்தியும்,அண்ணா பல்கலைக்கழக,உறுப்பு பொறியியல் கல்லூரிகள் அந்த கட்டணத்தை பல்கலைக்கழகத்திற்கு செலுத்துவதில்லை.ஆனால் இதனால் மாணவர்கள் தான் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்படாததற்கு ,
அண்ணா பல்கலைக்கழகம் காரணமா?அல்லது அவர்கள் பயின்ற கல்லூரி நிறுவனங்கள் காரணமா? என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது.மேலும் இது குறித்து விரைவில் விசாரணை நடத்த உயர் பள்ளி கல்வித்துறை முன்வர வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Pavithra