சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்கள், வளாகத்தைவிட்டு வெளியேற மும்முரமாய்த் தயாராகி வருகின்றனர். சீன நேரப்படி இன்று காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வளாகத்தைக் காலி செய்தாகவேண்டும். காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் பெரிய வாகனங்கள் துணைத் தூதரகத்திற்குள் சென்று வந்த வண்ணம் உள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ,இடையிலான உறவில் இதுவரை இல்லாத பதற்றம் நிலவுகிறது. வர்த்தகம், மனித உரிமை, கொரோனா நோய்ப் பரவல், ஹாங்காங்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பூசல் நீடிக்கிறது.