உலகின் வேறெந்த நாட்டையும் விட அந்த நாடு அதிகளவு பாதிப்பை கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரி அமெரிக்காவை பாடாய்ப்படுத்துகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா பாதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 104 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது.
வெள்ளை மாளிகையின் எபோலா வைரஸ் தடுப்பு நிபுணராக இருந்த ராப் கிளெயின் கருத்து தெரிவித்துள்ளார். பூமியில் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது. நீங்கள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதை விட ஒரு அமெரிக்கராக இருந்தால் கொரோனாவால் இறக்கிற அபாயம் அதிகமாக உள்ளது என்று கூறினார்.