உடலில் 100 நோய்களை குணப்படுத்தும் சோம்பு நீர்!! அடேங்கப்பா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

Photo of author

By Divya

உடலில் 100 நோய்களை குணப்படுத்தும் சோம்பு நீர்!! அடேங்கப்பா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் சோம்பில் மெக்னீசியம்,கால்சியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.தினமும் சோம்பு நீர் பருகுவதால் செரிமானக் கோளாறு,வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு உள்ளிட்டவை விரைவில் சரியாகிவிடும்.

சோம்பு நீரில் அதிகளவு இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இவை உடலில் இரத்த சோகை பாதிப்பை சரி செய்யும் தன்மையை கொண்டிருக்கிறது. அதேபோல் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் சோம்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.தொடர்ந்து பருகுவதால் கண் புரை,கண் எரிச்சல்,பார்வை கோளாறு சம்மந்தபட்ட பாதிப்பு பாதிப்பு விரைவில் சரியாகும்.உடல் பருமன்,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு இருப்பவர்கள் தினமும் சோம்பு நீர் பருகுவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும்.சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சோம்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*கற்கண்டு – 1 துண்டு

செய்முறை:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு சோம்பு சேர்த்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.இதை 30 நிமிடம் ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் ஊறவைத்துள்ள சோம்பு நீரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதில் 1 வெள்ளை கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளரில் வடிகட்டி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து பருகி வருவதன் மூலம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைத்து பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும்.

தினமும் தேயிலை தேநீர்,காபி குடிப்பதற்கு பதில் இந்த சோம்பு நீரை பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.