சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?

0
259
#image_title

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?

உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பொருட்களில் சோம்பும் ஒன்று. இதை பயன்படுத்தி தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சோம்பில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், கால்சியம், செலினியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின்கள் உள்பட பல சத்துக்கள் உள்ளது. ஒரு ஸ்பூன் அளவு சோம்பு எடுத்து அதை ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சோம்பல் தன்மை நீங்கி உடல் சுறுசுறுப்பு அடையும். நாள்தோறும் நாம் குடிக்கும் டீ மற்றும் காபிக்கு பதிலாக சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சோம்பு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

* டீ மற்றும் காபிக்கு பதிலாக காலை வேலையில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு பசி எடுக்கும்.

* நாள்தோறும் சோம்பு தண்ணீர் குடித்தால் செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

* தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

* உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் சோம்பு தண்ணீர் குடிக்கலாம். இதனால் உடலி தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும்.

* நாள்தோறும் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி இரத்தம் சுத்தமடையும்.

* தொப்பை உள்ள நபர்கள் சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து கட்டுடல் கிடைக்கும்.

* சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் சரியாகும்.

* சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நம்முடைய மூளை சுறுசுறுப்பு அடையும். மேலும் மூளை புத்துணர்ச்சி பெறும்.

Previous articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?
Next articleஅழகப்பா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31000/- ஊதியத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!