சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைகால் போன்ற பகுதிகளில் இன்று சில இடங்களில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.சென்னை ,திருவள்ளூர் ,கடலூர் ,மயிலாடுதுறை ,பெரம்பலூர்,புதுக்கோட்டை ,நெல்லை ,சிவகங்கை ,விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.