SC/ST மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!
கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக வீட்டில் படிக்க வசதி இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி படித்து வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மே 31 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தனர்.
எனவே முடிந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் இதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் தகவல்களை அறிய மற்றும் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளுக்கு இந்த https://tnadtwscholarship.tn.gov.in/ இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-599-7638.
இந்த தொலைப்பேசி எண்ணிற்கு அழைத்து உங்களுக்கான அனைத்து சந்தேகங்களையும், தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான பயத்தையும் போக்கிக்கொள்ளலாம். இந்த எண்ணிற்கு வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறியலாம்.