முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!
முன் நெற்றியில் முடி உதிர்வு ஏற்பட்டால் முகம் பார்க்க அழகாக இருக்காது. ஒரு சிலருக்கு பிறக்கும் பொழுது முன் நெற்றியில் முடி இருக்காது… சிலருக்கு சத்து குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் முன் நெற்றியில் முடி உதிர்ந்து விடும்.
கூந்தல் அடர்த்தியாக இருக்க வேண்டும்… கருமையாக இருக்க வேண்டும்… என்று ஆசைக் கொள்பவர்கள்.. முன் நெற்றி முடியை பற்றி கண்டு கொள்வதில்லை. நமக்கு அழகு கொடுப்பது முடி என்றால் நம் அழகை கெடுப்பது முடி உதிர்தல்…
இன்றைய கால வாழ்க்கை சூழலில் இளம் வயதினர், சிறுவர்களுக்கு தான் முடி உதிர்தல் பாதிப்பு அதிகம் இருக்கின்றது.
இந்த முன் நெற்றி முடி உதிர்விற்கு எளியத் தீர்வு இதோ…
*தேங்காய் எண்ணெய்
*செம்பருத்தி இலை
*வெந்தயம்
அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலை மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆற விடவும்.
இதை தினமும் முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி வளரும்.