இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்க பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழத் தொடங்கும்.

தலை முடி உதிரக் காரணம்:-

*பொடுகு

*தலை அரிப்பு

*உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்

*இரத்த சோகை

*ஜீன் குறைபாடு

*தலைமுடி வறட்சி

*மன அழுத்தம்

*முறையற்ற தூக்கம்

தலை முடி அடர்த்தியாக வளர தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*தேன் – 1/2 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

பெரிய வெங்காயம் ஒன்று எடுத்து தோல் நீக்கி அவரை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அவற்றை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

இந்த வெங்காய சாற்றை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் ஆலிவ் ஆயில் மற்றும் சுத்தமான தேன் கலந்து நன்கு கலக்கவும்.

பின்னர் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து 1 முதல் 2 வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.

தயார் செய்து வைத்துள்ள இந்த ரெமிடியை முடியின் வேர் பகுதியில் படுமாறு தடவ வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி முடியை நன்கு அலச வேண்டும்.

இந்த ரெமிடியை வாரத்திற்கு 2 முறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் முடி உதிர்தல் பாதிப்பு நீங்கி முடி அடர்த்தியாக வளரும்.

தலை முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்:-

*முட்டை

*பழங்கள்

*இயற்கை ஹேர் ஆயில்

*இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஷாம்பு

*ஒமேகா 3 உணவு