மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

Photo of author

By Divya

மஞ்சள் பற்களை வெண்மையாக்க இதை பிரஸில் வைத்து பற்களை தேயுங்கள்!!

**1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 மஞ்சள், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து பிரஸில் வைத்து பற்களை தேய்த்தால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் முழுவதும் நீங்கி பற்கள் பளிச்சிடும்.

**1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து பிரஸில் வைத்து பற்களை துலக்கினால் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

**1/4 தேக்கரண்டி சமையல் சோடா, 1/4 தேக்கரண்டி வேப்ப இலை பொடியில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து பற்களை தேய்த்தால் பல்லில் படிந்த கிடந்த மஞ்சள் கறைகள் முழுவதும் நீங்கி பற்கள் வெண்மை பெறும்.

**டூத் பேஸ்ட், தூள் உப்பு, அரைத்த பூண்டு விழுதை சேர்த்து கலக்கி பற்களை தேய்த்தால் பல்லில் காணப்படும் மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.

**ஆரஞ்சு தோல் பவுடரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து பற்களை துலக்கினால் மஞ்சள் பற்கள் வெண்மையாகும்.

**தூள் உப்பில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து பற்களில் தேய்த்தால் மஞ்சள் படலம் படிந்த பற்கள் வெள்ளையாகும்.

**1/4 தேக்கரண்டி இலவங்கத் தூள், 1/4 தேக்கரண்டி பட்டை தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/4 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து பற்களில் தேய்த்தால் எப்படிப்பட்ட மஞ்சள் கறை படிந்த பற்களும் சில நிமிடத்தில் வெண்மையாக மாறிவிடும்.