மேனிக்கு “தாமரை விதை + தேன்” பயன்படுத்தினால் 20 வயதை குறைத்து காட்டும்!

Photo of author

By Divya

மேனிக்கு “தாமரை விதை + தேன்” பயன்படுத்தினால் 20 வயதை குறைத்து காட்டும்!

இழந்த இளமையை மீட்டெடுக்க தாமரை விதையை அரைத்து பயன்படுத்தி வரலாம். தாமரை விதை சரும சுருக்கம், வறட்சியை நீக்கி இளமை தோற்றத்தை தரக் கூடியவையாக உள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தாமரை விதை
2)தேன்
3)பால்

செய்முறை:-

ஒரு கப் தாமரை விதையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த தாமரை விதை பொடி இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை சருமம் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சுருக்கம், வறட்சி நீங்கி சருமம் மிகவும் மிருதுவாகவும், பொலிவாகவும் காணப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தாமரை விதை
2)வெந்தயம்
3)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கப் தாமரை விதை மற்றும் 1/4 கப் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த தாமரை விதை + வெந்தயப் பொடி இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு நான்கு தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை சருமம் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சுருக்கம், வறட்சி நீங்கி சருமம் மிகவும் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறும்.