வெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

வெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Divya

Updated on:

வெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

சின்ன வெங்காயம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.இதை தலைக்கு உபயோகித்து வந்தால் முடி உதிர்தல்,பொடுகு தொல்லை,தலை அரிப்பு ஆகியவை கட்டுப்படும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து நேரடியாகவும் தேய்க்கலாம்.அல்லது எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டும் தேய்த்து வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)சின்ன வெங்காயம்
3)கறிவேப்பிலை
4)வெந்தயம்

செய்முறை:-

1/4 கப் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 கப் கறிவேப்பிலை மற்றும் 3 தேக்கரண்டி வெந்தயத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு எண்ணையை நன்கு ஆற விடவும்.இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.

இந்த எண்ணையை தலைக்கு உபயோகித்து வந்தால் கூந்தல் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும்.