கைதிகளுக்கு வித்தியாசமான முறையில் தண்டனையா?

0
134

துபாய் போலீஸ் துறை சார்பில் துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் அங்குள்ள தண்டனை மற்றும் சீர்திருத்த மையத்தின் சார்பில் ஜெயில் கைதிகளுக்கு பல்வேறு கைத்தொழில்கள் கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு மனதளவில் அவர்கள் தன்னம்பிக்கை அடைய பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஜெயில் தண்டனை முடிந்து வீடு திரும்பும் நிலையில் தங்களுக்கு என ஒரு கைத்தொழிலை கற்று இருப்பதால் வாழ்வாதாரத்திற்கும், குடும்பத்தினரை காப்பாற்றுவதற்கும் உதவிகரமாக உள்ளது.

இதனை அடுத்து சிறப்பு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு கைவினை பொருட்கள், கைத்தொழில்கள் ஜெயில் வளாகத்திலேயே கற்றுத்தரப்படுகிறது. இதில் தற்போது துபாயின் பாரம்பரிய நெசவு தொழில் ஜெயில் கைதிகளுக்கு கற்றுத்தர பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் தற்போது 18 ஜெயில் கைதிகள் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 5 நாள் பயிற்சியில் ஜெயில் கைதிகள் தங்களே போலீஸ் ‘லோகோ’வை நெசவு செய்து அதிகாரிகளிடம் அளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Previous articleஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிய விலக்கு !!
Next articleகெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !!