கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !!

0
61

கேலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை சுத்திகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் !!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீர் அருகில் உள்ள ரசாயன ஆலையில் கழிவால் நுரையுடன் வெளியேறி, தண்ணீரில் செல்லும் பகுதியில் துர்நாற்றம் வீசியதனையடுத்து, தண்ணீரை சுத்தபடுத்தி பயன்படுத்த நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இந்த தண்ணீரானது ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது.ஆனால் கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 800 கன அடிக்கு மேல் நீர்வரத்து அதிகரித்தல், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் ஆற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

திறந்துவிடப்பட்ட தண்ணீரில் இருந்து நேற்று காலை பாசன கால்வாய்களில் 88 கன அடி தண்ணீரும், மற்றும் 640 கனஅடி தண்ணீரும் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளன. கால்வாய் பகுதியில் மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீரில் அதிக அளவில் நுரை பொங்க தொடங்க ஆரம்பித்துள்ளனர் .ரசாயனக் கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட நுரையால் அந்த பகுதியில் பெரும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தண்ணீரானது தூய்மை படுத்தாமல் அப்படியே தமிழக எல்லையில் கொடியாளம் வழியாக ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது .இந்த தண்ணீரில் தொழிற்சாலை கழிவுகளும், சர்க்கரை தண்ணீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசியும், தண்ணீர் மாசும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடக அரசு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கர்நடாக அரசு அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், ஓசூர் மாநகராட்சிக்கும் நாள் தோறும் 1.50 கோடி லிட்டர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் 400 கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . தற்போது அனைத்தும் மாசு கலந்த தண்ணீராக மாறி வந்துள்ளது.ஆடு,மாடுகள் குடித்தால் அவற்றுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகிறனர். தென்பெண்ணை ஆற்று நீரானது ஐந்து மாவட்ட மக்களின் விவசாயம் ,நிலத்தடி நீர் ,குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதார பயன்பட்டிற்கு பயன்படுத்துவதால் மாசினை தடுக்க வேண்டும் என்று விவசாய்களின் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.மேலும் தென்பெண்ணை ஆற்று நீர் முழுமையாக சுத்திகரித்து அனுப்பி விடும் வகையில் அதிநவீன சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K