உலகம் முழுவதும் இத்தனை கோடி பேர் குணமாகி உள்ளனரா?

0
120
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 590 பேருக்கும், அமெரிக்காவில் 38 ஆயிரத்து 199 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 81 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Previous articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர்
Next articleஇத்தனை சதவீதம் பேர் தடுப்பூசியை விரும்பவில்லையா?