வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!!
வாழை மரத்தில் உள்ள எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை.அதுபோன்று வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை பற்றிய நன்மைகளும் அதனுடைய இயற்கை குணங்களையும் பார்க்கலாம்.
வாழை மரத்தில் பழம் முதல் நார் வரைக்கும் எந்த ஒரு பொருளும் வீணாக போவதில்லை.
வாழை மரத்தில் இருக்கக்கூடிய தண்டை பொரியல், கூட்டு இதுபோன்ற செய்து சாப்பிட்டால் ரொம்பவே நல்லது.
அதுவே வாழத்தண்டை ஜூஸாக குடித்தால் என்ன பயன்கள் கிடைக்கும்.
1:உயர் இரத்த அழுத்தம் பாதிக்கப்படுபவர்களுக்கு வாழைத்தண்டு சாறு ரொம்ப நல்லது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
2: வாழைத்தண்டு சாற்களில் இரும்பு, விட்டமின்B6 இதுபோன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இதே ரத்தத்தில் இருக்கிற ஹீமோகுளோபின் லெவலை அதிகப்படுத்தும்.
3: வாரத்தில் மூன்று முறை இந்த சாறை குடித்தால் போதும் சிறுநீரகப் பாதைகள் இருக்க தொற்றுக்களை நீக்கி சிறுநீரகப் பாதையை சரிப்படுத்தும்.
4: முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இந்த சாறை வடிகட்டாமல் குடித்தால் நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் சர்க்கரையோட லெவல்ல அதிகப்படுத்தாமல் தடுக்கும்.
5: அசிடிட்டி பிரச்சனையால் இருப்பவர்களுக்கு இந்த வாழைத்தண்டு சாறை குடித்தால் சரியாகிவிடும்.
6: சின்ன இஞ்சி துண்டை வாழைத்தண்டு சாறுடன் சேர்த்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து விடும்.
7: வாழைத்தண்டில் பொட்டாசியம் இருக்கிறது அதேபோல் எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது அதனால் வாழைத்தண்டை சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாகிறது தடுக்கும்.
8: உடல் எடை குறைப்பதற்காக வாழைத்தண்டு சாறை குடித்தால் போதும்.
எனவே வாழைத்தண்டு சாறை வாரத்தில் மூன்று முறை குடித்து வந்தால் போதும் எந்த ஒரு நோய் இல்லாமல் இருக்கலாம்.இதுவே வாழைத்தண்டு மற்றும் வாழைத்தண்டு சாறு மருத்துவ குணங்கள் ஆகும்.