இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

0
121
#image_title

இந்த ஒரு செடி மஞ்சள் காமாலை குணப்படுத்தும்!! உடனடி தீர்வுக்கு சூப்பர் டிப்ஸ்!!

மஞ்சள் காமாலை என்பது அதிக அளவில் பித்தத்தால் ஏற்படுகிறது. மஞ்சள் நிறம் கல்லீரல் தயாரிக்கப்பட திரவம் காரணமாக ஏற்படும். இது தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்வதால் தோல் கண் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும்.

மஞ்சள் காமாலை ஒரு நோயல்ல. ஆனால் ரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகள் அறிகுறியாகவும் இருக்கிறது. நமது ரத்தத்திலுள்ள ரத்த சிவப்பணுக்கள் வயதாகும்போது   அழிக்கப்பட்டு பிலிரூபின் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. இந்த பிலிரூபின் மலம் மற்றும் சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும்.

அறிகுறிகள்

தோல் நாக்கு மற்றும் கண்களில் வெள்ளை நிறத்தில் மஞ்சள் நிறமாக மாறுவது, அடர் மஞ்சள் நிற சிறுநீர், துர்நாற்றம் வீசும் மலம், கல்லீரல் மந்தமான வலி, பசி இன்மை, மெதுவான நாடித்துடிப்பு, குமட்டல், கடுமையான மலச்சிக்கல்,  வாயில் கசப்பு  சுவை, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் சோர்வு.

தேவைப்படும் பொருட்கள்

15 கீழாநெல்லி செடி வேர்

பசும்பால் அல்லது ஆட்டுப்பால்

செய்முறை

கீழாநெல்லி செடியை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவிய பின்னர் அதனை அரைத்து சாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தச்  சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பசும்பால் அல்லது ஆட்டுப்பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கூடிய விரைவில் குணமாகும். இதனை குடிப்பதால் சில சமயங்களில் குமட்டல் ஏற்படும். மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்தாக கீழாநெல்லி அமைகிறது.  கீழாநெல்லி வேரில்  மஞ்சள் காமாலை தடுக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

author avatar
Jeevitha