ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் இத்தனை இந்திய வீரர்களா?

0
144

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி வைக்க கூடும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல கூடும்.  மற்ற வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்டு அணியில் இணைந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது

Previous articleமும்பை அணியில் விளையாட மறுத்த முக்கிய வீரர்?
Next articleகரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் வென்ற நைட் ரைடர்ஸ் அணி