காரமான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபர்கள் நீங்களா!!! இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல விளைவுகள் என்னென்ன!!!

Photo of author

By Sakthi

காரமான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடும் நபர்கள் நீங்களா!!! இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல விளைவுகள் என்னென்ன!!!

காரமான உணவுகளை தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

அறுசுவைகள் என்று அழைக்கப்படும் இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவற்றில் கார்ப்பு என்று அழைக்கப்படும் காரம் சுவை நமது உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த காரச் சுவை கொண்ட உணவுகளை அதிகமான நபர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை அதிகமாக சாப்பிடும் பொழுது என்ன நடக்கும் என்பது பற்றி தெரியாமல் நாம் உண்டு வருகிறோம்.

உலக அளவில் காரத்திற்காக சிவப்பு மிளகாய் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு மிளகாயை விட சிவப்பு மிளகாய் பொடியை அதிகளவு பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கின்றது. அதிக காரம் நிறைந்த உணவு பொருளை சாப்பிடும் பொழுது அப்பொழுதே வயிற்று எரிச்சல், வாய் எரிச்சல் ஆகியவை ஏற்படும். ஆனால் நாளடைவில் காரமான உணவுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அந்த பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அதிக காரமான உணவை சாப்பிடும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள்…

* நாம் தொடர்ந்து அதிகமாக காரச்சுவை உள்ள உணவு வகைகளை சாப்பிடும் பொழுது நம் வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.

* நாம் தொடர்ந்து காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.

* இந்த காரம் அதிகம் உள்ள உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு செரிமான பிரச்சனையும் ஏற்படுகின்றது.

* நாம் காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மற்ற உணவுகளில் இருக்கின்ற ஊட்டச் சத்துக்களை இது அழிக்கின்றது. அதனால் நம் உடலுக்கு உணவுகளில் இருந்து கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகின்றது.

* தொடர்ந்து நாம் அதிக காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.

* இந்த காரம் நிறைந்த உணவுகள் நமக்கு ஏற்படும் வாய்ப் புண்களுக்கு காரணமாகின்றது.

* ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அதிகம் காரம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

* நாம் தொடர்ந்து அதிகம் காரம் உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது நமது உடலில் உள்ள நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றது.

* கர்ப்பிணிப் பெண்கள் அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது பிரசவத்தின் முன் கூட்டிய அபாயம் ஏற்படும்.