தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!!

0
171
#image_title

தினமும் அரிசி சாதம் உண்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான எச்சரிக்கை இதோ!!

நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அரசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி புதிது புதிதாக நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குறைந்த நாட்களில் அறுவடைக்கு வந்து விடுகிறது.

இதனால் அரிசி தேவை பூர்த்தியாகும் என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் உடல் ஆரோக்கியம் இழந்து விடும் என்பது தான் நிதர்சனம். அரிசியை பாலிஷ் செய்யாமல் உண்டால் உடலுக்கு தேவையான சதுக்கள் கிடைக்கும். ஆனால் பாலிஷ் செய்யப்படாத அரிசியை விட பாலிஷ் செய்யப்பட்ட அரிசி தான் அதிக ருசியாக இருக்கும் என்பதினால் உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாமல் டேட்ஸ்க்காக பாலிஷ் செய்யப்பட்ட அரசியை சமைத்து உண்டு வருகிறோம்.

அதேபோல் எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்ணுவது நல்லது. இல்லாவிட்டால் அவை நஞ்சாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அரிசி சாதத்தை தினமும் உண்பதினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் ஏராளம்.

1)அரிசியில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் உடலில் அதிகளவு மாவுச்சத்து உருவாக காரணமாக அமைந்து விடும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே தினமும் அரிசி சாதம் உண்ணாமல் கோதுமை, ரவை, ராகி உள்ளிட்ட சிறு தானிய உணவுகளை எடுத்து வருவது நல்லது.

2)சமைக்கப்பட்ட அரிசியில் அதிகளவு கலோரிகள் அடங்கி இருக்கிறது. இந்த கலோரி நிறைந்த உணவை உண்டு வருவதினால் உடல் எடை விரைவில் கூடி விடும். இதனால் பல நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் தாக்கும் சூழலுக்கு ஆளாகி விடுவோம்.

3)உண்ணும் உணவு செரித்து உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலாக மாறுவதை மெட்டபாலிசம் என்று கூறுகிறோம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால்உடலுக்கு தேவையான இந்த மெட்டபாலிசத்தை அரிசி உணவு மட்டப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் குறைகிறது. எனவே அரிசி உணவை தினமும் உட்கொள்வதை தவிர்க்கவும்.

4)அரிசி சாதத்தில் உள்ள கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் நம்மை சோம்பேறியாக்கி விடுகிறது. இதனால் உடல் எடை கூடல், உடல் மந்த நிலை உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகத் தொடங்கி விடுகிறது.

5) அரிசி சாதத்தில் உள்ள அதிகப்படியான கலோரிகள் இதயம் தொடர்பான பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடுகிறது.

6)அதிகளவு அரிசி சாதம் உண்பதினால் வாயுத் தொல்லை, தூக்கமின்மை, வயிறு தொடர்பான பாதிப்பு உள்ளிட்டவைகள் உருவாகத் தொடங்கி விடுகிறது. எனவே வாரத்தில் 3 நாட்கள் அரசி சாதம் மற்ற நாட்களில் சிறு தானிய உணவு வகைகளை உண்பது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleஉடல் பருமன்? அப்போ இந்த ட்ரிங்கை காலையில் 1 கிளாஸ் குடிங்க!! ஒரே வாரத்தில் 7 கிலோ குறைஞ்சிடுவீங்க!!
Next articleஅப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!