தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு அளித்து வந்த முன்னுரிமையில் தற்பொழுது திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இதற்கு மேல் அரசு பணிகளில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.
அரசு தலைமை செயலர் நா முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே இனி அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அந்த சட்டத்திற்கான திருத்த சட்டம் 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பிற மொழிகளை பயிற்று மொழிகளாக கொண்டு தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஒன்றாம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்றும் இடையில் வந்து தமிழ் வழிக் கல்வியை கற்றுக்கொண்டு அரசு பணிகளில் சேர நினைப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை அவர்கள் படித்த மற்றும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி படிப்பதற்கான சான்றிதழ்களை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் தற்பொழுது வேலை பார்க்கக்கூடிய அனைவரும் அதிலும் குறிப்பாக பள்ளி கல்வியாக இருந்தால் தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கக்கூடிய சான்றிதழ்களின் அடிப்படையில் அது உயர்கல்வியாக இருந்தாலும் தொழிற்பயிற்சி நிலையம் கல்லூரி பல்கலைக்கழகம் முதல்வர் பதிவாளர் வழங்கும் சான்றிதழ்களின் அடிப்படையிலும் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அலுவலர்களால் வழங்கப்படக்கூடிய சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கே செல்லாமல் நேரடியாக தனித்தேர்வார்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி அற்றவர்களாக குறிப்பிடப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தங்களுடைய மேல்நிலைப் பள்ளிகளை மட்டும் தமிழ் வழியில் படித்து முடித்தவர்களுக்கும் இதன் கீழ் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் கல்வி தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி கல்லூரிகளில் குறிப்பாக தமிழ் பாடத்திட்டத்திற்கான ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்றும் இவ்வாறு நியமனம் செய்யப்படக் கூடியவர்களுக்கு 20% முன்னுரிமை ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இவை அனைத்தும் அவர்கள் எழுதக்கூடிய தேர்வான முதல் நிலை தேர்வு முதன்மை தேர்வு நேர்முக தேர்வு மற்றும் இதர நிலைகளில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.