வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

0
100
#image_title

வீட்டில் நிம்மதி இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

நம்மில் பலர் நிம்மதி இல்லாமல் கஷ்டப் படுகிறோம். வீட்டில் சண்டை, பணக் கஷ்டம், கடன் பிரச்சனை, வேலை இல்லாமை, குறைந்த வருமானம் உள்ளிட்டவைகளால் நிம்மதி இன்றி தவித்து வருகிறோம். இதற்கு ஆன்மீக வழியில் சிறந்த தீர்வு இருக்கிறது.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

*கண்ணாடி கிண்ணம்

*நன்னாரி பவுடர்

*பச்சைக் கற்பூரம்

*கல் உப்பு

*ஏலக்காய்

*கருப்பு மிளகு

*பன்னீர்

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு சிறிய கிண்ணத்தில் பன்னீர் ஊற்றி கொள்ளவும். அதில் சிறிது நன்னாரி பவுடர் மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை வீடு முழுக்க தெளிக்கவும். பின்னர் கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் சிறிது கல் உப்பு போட்டு கொள்ளவும். பிறகு 5 ஏலக்காய் மற்றும் சிறிது கருப்பு மிளகு சேர்த்து போட்டு வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் யார் கையும் படாதவாறு வைக்கவும்.

இதை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும்.

ஆனால் மேலே சொன்ன நீர் தெளிக்கும் முறையை தொடர்ந்து 7 நாட்கள் செய்து பின் வாரம் 3 முறை என்று தொடர்ந்து செய்து வரவும்.

மூன்றாவதாக ஒரு சிறிய அகலில் 2 கற்பூர வில்லைகள் வைக்கவும். அடுத்து அதில் 2 பிரிஞ்சி இலைகளைக் கிள்ளிப் போட்டு எரிய விடவும்.

இதை வீடு முழுவதும் காட்டவும். இதை வாரம் மூன்று முறை செய்து வரவும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

Previous articleஇளநரை? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!
Next articleவெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்!!