சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்!

0
291
#image_title

சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மூலிகை வகைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

அன்றாடம் வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் மற்றும் போதுமான அளவு சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காத காரணத்தினால் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலிலுள்ள மெட்டபாலிசத்தின் அளவு குறைகிறது.

இதன் விளைவாக சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலின்களின் அளவு சரிவர சுரக்காததன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

சிறுகுறிஞ்சான் இலை இதில் உள்ள மருத்துவ குணங்கள் சர்க்கரை நோயின் அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை சிறிதளவு வாயில் போட்டு மென்று உண்டதற்கு பிறகு இனிப்பான உணவுகளை சாப்பிடும் பொழுது இனிப்பு தன்னை உணர இயலாது.

சிறுகுறிஞ்சான் இலைகளில் ஜிம்னிக் ஆசிட் என்னும் அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை கணையத்தில் இன்சுலின்களின் அளவை அதிகரிப்பதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சிறுகுறிந்தான் இலைகளை நன்றாக காய வைத்து பொடி செய்து அதன் பிறகு உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் சிறுகுறிஞ்சான் இலைத் தூளை நீருடன் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் காரணமாக நம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆவாரம் பூ இலைகள் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயினால் வரக்கூடிய சிறுநீரக பாதிப்பினை முற்றிலும் தடுக்க உறவுகிறது. ஆவாரம் பூவினை பொடி செய்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகி வருவதன் காரணமாக உடலில் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

Previous articleஇந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை ஆஸ்துமா தான்!
Next articleசர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!