சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

0
427
#image_title

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்டன் இணைந்து பங்கேற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார்.

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சனோவா ஜோடியை எதிர் கொண்டார் . இந்த போட்டியில் சானியா மற்றும் கீஸ் ஜோடி 4-6 0-6 என்ற கணக்கில் ரஷ்ய ஜோடியான வெர்னோக்கியா குடெர்மெடோவா மற்றும் லியுட்மிலா சாம்சோனோவா ஜோடியிடம் தோல்வியடைந்தனர். இதனையடுத்து சானியா மிர்சாவின் 20 ஆண்டு கால டென்னிஸ் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர் ,இரட்டையர் பிரிவில் 43 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை இருந்தால் போதும்!
Next articleஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here