அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Divya

அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

இன்றைய காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியமும் விரைவில் கெட்டு விடுகிறது.

மனிதர்களுக்கு தினமும் மூன்று வேலை உணவு கட்டாயம்.ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே மறந்து விட்டனர்.இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.வெகுநேரம் உணவு உட்கொள்ள வில்லை என்றால் குடற்புண் ஏற்பட்டு நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது.

அடிவயிற்று வலி,குமட்டல்,வயிறு உப்பசம்,கருப்பு நிற மலம்,திடீர் எடை குறைவு,புளித்த ஏப்பம் போன்றவை அல்சர் இருப்பதற்கான பொதுவான காரணங்களாக சொல்ல படுகின்றது.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*பீட்ரூட் – 1

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*தேங்காய் பால் – 1/2 டம்ளர்

செய்முறை:-

முதலில் ஒரு பீட்ரூட் எடுத்து அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

அடுத்து வெந்தயம் 1 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து 1 தேக்கரண்டி சீரகம் எடுத்து உரலில் சேர்த்து இடித்துக் கொள்ளவும்.அதை பீட்ரூட் சீவி வைத்துள்ள பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 1/4 மூடி தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.இதை பீட்ரூட் உள்ள பவுலில் வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் பீட்ரூட்டில் சேர்த்த அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து சாப்பிடவும்.இதை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் குடற்புண் நீங்கி அல்சர் பாதிப்பு சரியாகி விடும்.