கை கால் மரத்துப் போகிறதா? இதோ அதற்கான காரணமும் வீட்டு வைத்தியமும்!
பொதுவாக நமது வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம், இதனால் பல உடல் நல பிரச்சனைகள் வருகிறது. அதுவும் நிறைய பேருக்கு கால்களில், கைகளில் உணர்வு போதல் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை மரத்து போதல் அல்லது உணர்வின்மை என்று கூறுவர்.
காரணங்கள்:
*நமது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கை கால்கள் மரத்து போதல் ஏற்படும்.
* உடலில் 2 கால்களும் மரத்துப் போனால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக போனால் இந்த அறிகுறி தோன்றும்.
* சில பேருக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சனை இருக்கலாம். இதற்கு காரணம் மரபணுக்களின் கோளாறாக இருக்கலாம்.
* அதிக மன அழுத்தம் அதிக கோபம் ஆகியவற்றின் காரணமாக நரம்புகளில் பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக கூட மரத்துப்போதல் பிரச்சனை ஏற்படலாம்.
* வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கை கால் மரத்து போதல் பிரச்சனை ஏற்படும். இதனால் இந்த வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
* தைராய்டு ஹார்மோன் சுரப்பு சீராக இல்லாதவர்களுக்கும் இந்த மரத்துப்போதல் பிரச்சனை ஏற்படும். அவர்கள் இந்த ஹார்மோன் பிரச்சனையை சரி செய்வது நல்லது.
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கால்சியம் குறைபாடு மற்றும் அதிக உடல் எடை காரணமாகவும், அதிக ஆன்டிபயாட்டிக் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த மரத்துப்போதல் பிரச்சனை ஏற்படும்.
* குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கணினியில் அதிகம் வேலை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு கை கால் மரத்துப்போதல் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது எழுந்து விட்டு பிறகு அமரலாம்.
இந்த மரத்துப்போதல் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வீட்டு வைத்திய முறையில் எளிதாக குணப்படுத்தலாம்.
தீர்வு:
1.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும். அடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
இதை நன்றாக கலக்கி விட்டு தினமும் குடித்து வர வேண்டும். இந்த ஆப்பிள் சீடர் வினிகர் நரம்புகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து மரத்துப் போதல் பிரச்சனையை நீக்கும்.
2. அடுத்து எளிமையான வைத்திய முறை எப்சம் உப்பை கொண்டு செய்வது. இது சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்காது. ஆனால் மருந்தகங்களில் கிடைக்கும். இது எப்சம் உப்பு அல்லது மெக்னீசியம் சல்பேட் என்ற பெயர்களில் கிடைக்கும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கால் பொறுக்கும் அளவு சுடு தண்ணீரை ஊற்றி அதில் எப்சம் உப்பை போட்டு கலக்கவும். பின்னர் அதில் மரத்துப்போன காலை வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். இதைப் போல் வாரத்தில் 4 நாட்களுக்கு செய்தால் போதும். மரத்துப் போதல் பிரச்சனை குணமாகும்.
எப்சம் உப்பில் உள்ள மெக்னீசியம் நரம்புகளில் உள்ள வீக்கம் போக்கி உடல் வலியை நீக்கும்.