சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி?

0
43
#image_title

சுவைக்க சுவைக்க சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கன் பேடா – சுவையாக செய்வது எப்படி?

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரிய உணவு உள்ளது. எத்தனை தலைமுறைகள் வந்தாலும் அதன் ருசி மாறாது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கன் பேடா தான்.

மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்று சொல்லப்படுகிறது. பேடா என்றும் சர்க்கரை பாகு. நயமாக தொண்டை குழியில் செல்வதால் அதனை மக்கள் பேடா என்று அழைத்திருக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்

இனிப்பு இல்லாத கோவா – 300 கிராம்

வெண்ணெய் – 2 ஸ்பூன்

சமையல் சோடா – 2 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

பூரணம் செய்ய பொடியாக நறுக்கிய முந்திரி , பாதாம் பருப்பு – 2 ஸ்பூன்

சாரைப் பருப்பு – 2 ஸ்பூன்

குங்குமப்பூ – சிறிதளவு

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

செய்முறை

முதலில் சமையல் சோடாவுடன் வெண்ணெயை நன்றாக கலக்க வேண்டும்.

இதன் பிறகு மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். தேவையென்றால் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்.

இதன் பிறகு, பாதாம், முந்திரி, சாரபருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பூரணம் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர், அதில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும்.

சர்க்கரை பாகு கம்பி பதம் வந்த பிறகு இறக்கி விட வேண்டும்.

பின்னர், மாவை உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

பொறித்த உருண்டைகளை அப்படியே சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து வைக்க வேண்டும்.

2 மணி நேரம் ஊற வைத்து விட்டு சாப்பிட்டால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா ரெடி.

 

author avatar
Gayathri