சிறுவயதிலேயே இளநரையா!! இந்த எண்ணையை தேய்த்து பாருங்கள் உடனடியாக சரியாகிவிடும்!!

0
150

சிறுவயதிலேயே இளநரையா!! இந்த எண்ணையை தேய்த்து பாருங்கள் உடனடியாக சரியாகிவிடும்!!

இந்த காலத்தில் அனைவரும் எதிர்கொள்கின்ற ஒரு தீராத பிரச்சனை தான் நரைமுடி. வயதானால் வரக்கூடிய நரைமுடியானது இந்த காலத்தில் சிறிய வயது உடையவர்களுக்கே அதிகமாக காணப்படுகிறது. இதற்கு ஏராளமான வழிமுறைகளை பின்பற்றியும் பல பேர் அதனால் எந்த பயனும் இல்லை என்று வருத்தப்படுகின்றனர். எனவே இந்த இளநரையை சரி செய்வதற்கு ஒரு இயற்கையான வழிமுறையை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி
தேங்காய் எண்ணெய் 50 ml

இதை செய்வதற்கு நமக்கு முதலில் தேவைப்படும் பொருள் நெல்லிக்காய் பொடி. இந்த நெல்லிக்காய் பொடியானது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதற்கும், முடியின் வேர்க்கால்களை வலிமையாக வைத்துக் கொள்வதற்கும், முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து நரைமுடி இல்லாமல் கருமையாக வளர வைப்பதற்கும் இது மிகவும் உகந்த ஒன்றாகும். மேலும் தேங்காய் எண்ணெய் ஆனது முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 50ml தேங்காய் எண்ணெயை சேர்த்து சிறிதளவு சூடான உடன் அடுப்பை நிறுத்திவிட்டு பிறகு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து விடவும்.

இந்த எண்ணையை மூன்று நாளைக்கு அப்படியே வைத்து விட்டு பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தயார் செய்த இந்த எண்ணெயை தினமுமே தேய்த்து வரலாம். அல்லது தினமும் எண்ணெய் வைக்க பிடிக்காது என்று சொல்பவர்கள் வாரத்தில் இரண்டு முறையாவது இந்த எண்ணையை தேய்த்து வரலாம்.

இந்த எண்ணையை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவ்வாறு இதை தலையில் நன்கு மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அல்லது ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு பிறகு தலைக்கு குளித்து வரவும். இவ்வாறு நாம் செய்து வருவதால் தலைமுடியில் ஏற்படக்கூடிய இளநரை பிரச்சனை நிரந்தரமாக குணமாகும்.

மேலும் இந்த எண்ணெய்யானது இளநரை பிரச்சினையை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமுடி நன்கு கருமையாக வளரவும் முடி உதிர்வு பிரச்சனையை நிறுத்தி தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும் பொடுகு தொல்லையை நீக்கவும் என்று பல பிரச்சினைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

Previous articleகால் நரம்பு இழுத்தல் மருத்து போதல் பாத வலி ஒரே வாரத்தில் சரியாக இதை செய்யுங்கள்!!
Next articleஇந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!!